உங்கள் விவரம்

சனி, 9 அக்டோபர், 2010

ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் சொல்லிக்கொடுக்கும் பயனுள்ள தளம்

ஆங்கில வார்த்தைகள் சிலவற்றை அல்ல, பலவற்றை நாம் தவறாகத்
தான் உச்சரித்துக்கொண்டிருக்கிறோம் இப்படி இருக்க ஆங்கில
வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லித்தர ஒரு
அருமையான இணையதளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

படம் 2

ஆங்கில மொழி நாட்டுக்கு நாடு உச்சரிக்கும் விதம் வேறுபட்டிருப்பது
நாம் அறிந்தது தான் ஒவ்வொரு நாட்டிலும் ஆங்கில மொழி
வார்த்தைகளை உச்சரிப்பு விதம் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
ஆங்கில மொழியின் உண்மையான வார்த்தை உச்சரிப்பை நாம்
இணையதளம் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.வேலைக்கு
சேர இருக்கும் நண்பர்களுக்கும் , மாணவர்களுக்கும் , ஆங்கிலப்
புலமை பெற்றவர்களுக்கும் சில வார்த்தை எப்படி உச்சரிக்க வேண்டும்
என்ற சந்தேகம் இருக்கலாம் அனைத்துக்கும் தீர்வாக இந்த
இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.inogolo.com
இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி உள்ள
கட்டத்திற்க்குள் எந்த வார்த்தைக்கான உச்சரிப்பு வேண்டுமோ அதை
கொடுத்தபின் search names என்ற பொத்தனை அழுத்தவும் சில்
நொடிகளில் நாம் தேடிய வார்த்தையைப்பற்றிய விபரங்களுடன் அதை
எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் படம் 2-ல் இருப்பது போல்
காட்டப்படும். இதில் இருக்கும் play என்ற ஐகானை சொடுக்கி நாம்
எப்படி உச்சரிக்க வேண்டும் என்று ஆன்லைன் மூலம் கேட்டுக்
கொள்ளலாம்.உதாரணமாக நாம் india என்ற வார்த்தையை கொடுத்து
சோதித்துப்பார்த்துள்ளோம். கண்டிப்பாக இந்தத் தளம் அணைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக