மொபைல் துறையின் அதிரடி வளர்ச்சியின் காரணமாக இப்போது
இணையதளங்கள் எல்லாம் மொபைலில் பார்க்கக்கூடிய நிலையில்
இருக்கிறோம் இந்த நிலையில் நம் வலைப்பூ மொபைலில் சரியாகத்
தெரிகிறதா என்று கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
மொபைலில் நம் தளம் நன்றாகவும், வேகமாகவும் , எந்த பிழைச்
செய்தி இல்லாமலும் தெரிகிறதா என்று சோதிக்க நாம் ஒவ்வொரு
மொபைல் போனிலும் சென்று சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை
எளிதாக நம் இணையதள முகவரியை கொடுத்தே மொபைலில்
சரியாகத் தெரிகிறதா என்று சோதிக்க ஒரு இணையதளம் உள்ளது
இணையதள முகவரி : http://validator.w3.org/mobile/
இந்த தளத்திற்கு சென்று நம் வலைப்பூவின் முகவரியைக் கொடுத்து
Check என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அவ்வளவு தான், நம்
தளம் எல்லா மொபைல் போனிலும் பிரச்சினை இல்லாமல் தெரிகிறதா
அல்லது பிரச்சினை என்றால் என்ன பிரச்சினை வருகிறது என்று
விளக்கமாக கூறிவிடுகின்றனர்.கண்டிப்பாக இந்தத்தளம் நமக்கு
பயனுள்ளதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக