அலைபேசிகளில் எஸ்எம்எஸ் என சொல்லப்படும் குறுஞ்செய்திகளை
மேலும் சுருக்கி அனுப்பலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு

அலைபேசிகளில் குறுஞ்செய்தி (SMS) கல்லூரி மாணவர்களிடையே
பெரும் வரவேற்பை பெற்று இதன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.
அதுவும் இலவச குறுஞ்செய்தி என்றால் உடனடியாக யாருக்காவது
எதாவது செய்தி அனுப்பி கொண்டே இருப்போம் ஆனால் இந்த
குறுஞ்செய்தியை மேலும் சுருக்கி எளிதாக அனுப்பலாம் நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.transl8it.com

படம் 2
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் உள்ளது போல் இருக்கும்
கட்டத்திற்குள் நம் குறுஞ்செய்தியை தட்டச்சு செய்ய வேண்டும்
தட்டச்சு செய்து முடித்ததும் transl8it! என்ற பொத்தானை அழுத்தவும்
சில நொடிகளில் நாம் கொடுத்த குறுஞ்செய்தி மேலும் சுருக்கப்பட்டு
படம் 2-ல் காட்டியபடி இருக்கும். இந்த தளத்தில் இலவசமாக ஒரு
கணக்கு உருவாக்கி கொண்டு இந்த குறுஞ்செய்தியை அலைபேசிக்கு
SMS ஆக அனுப்பலாம்.இதே போல் நாம் சுருக்கிய குறுஞ்செய்தியை
“பழையபடி மாற்றுவதற்கு முன்” இருந்த குறுஞ்செய்தியாக மாற்றலாம்.
சில நாட்கள் இந்ததளத்தில் இருந்து ஆங்கில செய்திகளை சுருக்கப்பட்ட
லிங்கோ செய்திகளாக மாற்றினால் நாளடைவில் நாமும் லிங்கோ
செய்தி அனுப்புவதில் திறமையானவர்களாக மாறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக