உங்கள் விவரம்

சனி, 9 அக்டோபர், 2010

MP3 பாடலை ஆன்லைன்-ல் வெட்டி ரிங்டோன் உருவாக்கலாம்.

MP3 பாடல்களை ஆன்லைன்-ல் எந்த சாப்ட்வேர் துணையும்
இல்லாமல் வெட்டி நாம் விரும்பியபடி ரிங்டோன் உருவாக்கலாம்
என்பதை பற்றி தான் இந்த பதிவு. http://mp3cut.net
இந்த இணையதளத்திற்கு சென்று முதலில் நாம் எடிட் செய்ய
வேண்டிய பாடலை நம் கம்ப்யூட்டரிலிருந்து தரவேற்றம் (UPLOAD)
செய்ய முதல் ஸ்டெப் படம் 1-ல் காட்டியபடி “ Upload mp3 “
என்ற பட்டனை அழுத்தி பாடலை அப்லோட் செய்ய வேண்டும்.

படம் 1

படம் 2

இப்போது நாம் அப்லோட் செய்த பாடல் படம் 2-ல் காட்டியபடி
வந்து விடும் இப்போது ஸ்டெப் 2 நமக்கு தேவையான பகுதியை
ஸ்லைடர் கண்ட்ரோல் பட்டன் இடது பக்கத்தில் உள்ளதில் இருந்து
தொடங்கி வலது பக்கம் உள்ள ஸ்லைடர் கன்ட்ரோல் மூலம் எங்கு
முடிய வேண்டும் என்பதையும் படம் 3-ல் காட்டியபடி தேர்வு
செய்துகொள்ளவும்.

படம் 3

படம் 4

எந்த பகுதி வேண்டுமோ அதை தேர்வு செய்த பின் பிளே செய்தும் சரி
பார்த்துக்கொள்ளலாம். சரியான் பகுதியை தேர்ந்தெடுத்து முடித்த பின்
ஸ்டெப் 3 படம் 4-ல் காட்டியபடி ஸ்பிளிட் அண்ட் டவுன்லோட்
( Split and Download) என்ற பட்டனை அழுத்தி நம் கம்ப்யூட்டரில்
தரவிரக்கிக்கொள்ளவும். இந்த முறையை பின்பற்றி எந்த ஒரு சாப்ட்வேர்
துணையும் இல்லாமல் நாமாக எளிதாக ஒரு ரிங்டோன் அல்லது
பாடலின் சில பகுதியை மட்டும் எடிட் செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக