உங்கள் விவரம்

புதன், 1 செப்டம்பர், 2010

மொபைலில் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற

இதற்கு தேவையானவை.

1. பிளாக்கரில் ஒரு வலைப்பதிவு
2. கேமரா வசதி உள்ள மொபைல் போன்
3. மின்னஞ்சல் அனுப்ப மொபைலில் இணைய வசதி (GPRS)

உங்கள் பிளாக்கர் டாஷ்போர்டில் (Dashboard) Settings --> Email & Mobile சென்று கொள்ளுங்கள்.

அங்கே Email Posting Address என்பதில் secretWords என்பதில் உங்களுக்கு பிரத்தியேகமாக ரகசிய எழுத்துகளை கொடுத்து கொள்ளுங்கள். அந்த ஈமெயில் முகவரியை (yourname.secretwords@blogger.com) குறித்து வைத்து கொள்ளுங்கள். கீழே 'Publish emails immediately' என்பதை தேர்வு செய்து கொண்டு 'Save Settings' கிளிக் செய்து கொள்ளுங்கள்.

இனி மொபைலில் புகைப்படங்கள் பகுதிக்கு சென்று கொள்ளுங்கள். அதில் படங்களை பார்க்கும் போது 'Send' என்று ஒரு வசதி இருக்கும். அதனை அழுத்தினால் ஈமெயில் மூலம் படத்தை அனுப்புவதற்கான வசதி வரும். அதன் மூலம் நீங்கள் பிளாக்கரில் இருந்து பெற்ற ரகசிய ஈமெயில் முகவரிக்கு புகைப்படத்தை அனுப்பி விடுங்கள்.

இப்போது நீங்கள் அனுப்பிய புகைப்படம் உங்கள் பிளாக்கில் ஒரு இடுகையாக தானாக பதிவிடப்பட்டு இருக்கும். நீங்கள் அனுப்பும் ஈமெயிலில் Subject பகுதியில் கொடுப்பது இடுகைக்கான தலைப்பாக வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக