உங்கள் விவரம்

புதன், 1 செப்டம்பர், 2010

ஆன்லைனில் அன்ஸிப்

இந்த தளம் அந்த ஸிப் பைலை விரித்து, என்ன என்ன பைல்கள் அதில் உள்ளன என்று காட்டும். நீங்கள் அவற்றை ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ டவுண்லோட் செய்திடலாம்.
தளம் பலவகையான ஸிப் பைல்களைக் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. அவை –– 7z, ZIP, GZIP, BZIP2, TAR, RAR, CAB, ISO, ARJ, LZHCHM, Z, CPIO, RPM, DEB மற்றும் NSIS ஆகும்.
இதில் அப்லோட் செய்யப்படும் ஸிப் பைல் அளவு 100 எம்பிக்கு மேல் இருக்கக்கூடாது.
நமக்கு வரும் சில இமெயில் செய்திகளை காப்பி செய்து, டாகுமெண்ட் டெக்ஸ்ட்டாக வேர்டில் பேஸ்ட் செய்திடுவோம். அப்போது வேர்டில் உள்ள பேஜ் செட்அப் படி இமெயில் டெக்ஸ்ட் அமையாது. இமெயில்டெக்ஸ்ட்டில் உள்ள ஒவ்வொரு வரியிலும் ஒரு என்டர் ரிட்டர்ன் அடையாளம் இருக்கும். இதனால் வரிகள் முழுப் பக்கத்தில் பாதி பாதியாகத் தோற்றமளிக்கும். பாராக்களுக்கு மத்தியில் இரண்டு என்டர் தட்டியது போல இடைவெளி இருக்கும். இதனால் பிரிண்ட் எடுக்கையில் பேப்பர் வீணாவது போலக் காட்சி அளிக்கும். ஏனென்றால் பேப்பரின் முழு அகலத்திற்கும் டெக்ஸ்ட் அமையாது. இதனைச் சரி செய்திட வேண்டும் என்றால் ஒவ்வொரு வரியிலும் சென்று இவற்றை நீக்க வேண்டும்.
வேர்ட் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வைக் கொண்டுள்ளது. இமெயில் டெக்ஸ்ட்களைச் சரியான முறையில் பார்மட் செய்திட சில வழிகளைத் தருகிறது.
இமெயில் டெக்ஸ்ட்டை காப்பி செய்துவிட்டு, பின் அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் கண்ட்ரோல் + ஆல்ட்+ கே அழுத்தினால் ஆட்டோ பார்மட் வசதி இயக்கப்பட்டு, டெக்ஸ்ட் வழக்கமான வேர்ட் பார்மட்டில் அமைக்கப்படும்.
இதிலும் உங்களுக்குத் தேவையான பார்மட்டில் டெக்ஸ்ட் அமைந்திட வேண்டும் எனில் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. டூல்ஸ் மெனுவில் இருந்து ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இதில் ஆட்டோ பார்மட் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இந்த டயலாக் பாக்ஸில் நீங்கள் விருப்பப்படும் வகையில் பார்மட் வசதிகளை இயக்க செட் செய்திடவும். நீங்கள் ஏற்படுத்தும் ஆப்ஷன்ஸ், ஆட்டோ பார்மட் எப்படி செயல்பட வேண்டும் என்பதனை வரையறை செய்கின்றன.
4. பின் ஓகே கிளிக் செய்திடவும்.

இணையதள முகவரி : http://www.wobzip.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக