உங்கள் விவரம்

திங்கள், 20 செப்டம்பர், 2010

நமது புகைப்படத்தைப் பார்த்து நாமே சிரிக்க

நமது புகைப்படத்தைப் பார்த்து நாமே சிரிக்க

இது யாருன்னு தெரியுதா?.

தெரியலையா ?. அட நம்ம புரட்சி தலைவருங்க,.

தலைவர் எப்படா புரூலி கணக்கா படத்துல நடிச்சாருன்னு யோசிச்சு குழம்ப வேண்டாம்.

இது போல வடிவமைப்பதற்கு எண்ணற்ற இணைய தளங்கள் உள்ளன. அதைப் பற்றி இந்த இடுகையில்,.

funny.pho.to -

இந்த இணையத்தில் தான் தலைவர் புகைப்படத்தினை மாற்றினேன். கொடுக்கும் புகைப்படத்தினை வைத்துக் கொண்டு காணோளிகளைக் கூட இந்த வலைப்பூ தயாரித்துவிடுகிறது.

en.picjoke.com -

இந்த இணையத்தில் எண்ணற்ற புகைப்படச் சட்டங்கள் கிடைக்கின்றன. நாம் இணைக்கும் புகைப்படத்துடன் சட்டமும் சேர்ந்து அழகாக கிடைக்கின்றது.

loogix.com -

இந்த வலைப்பூவில் நம்முடைய முகத்தை கோணலாக்கி பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது. (அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என்றால் ஆட்டோ வருமே என்பதால், முன்னெச்சரிக்கைக்காக பெயர் தெரியாத ஒரு பயில்வானின் புகைப்படத்தினை பயன்படுத்தியிருக்கிறேன். உங்களுக்கு இவரைத் தெரிந்திருந்தால் என்னை போட்டுக் கொடுத்துவிடாதீர்கள்.)

மென்பொருள்கள் -

இது போன்று வித விதமான புகைப்படங்களை உருவாக்கி மகிழ இலசமாக மென்பொருள்கள் கூட கிடைக்கின்றன.

இந்த மென் பொருள்களை தரவிரக்கம் செய்ய funphotor இணையத்திற்கு செல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக