
இந்த சோசியல் மீடியா இணையங்களை பயன்படுத்த நாம் நமக்கென ஒரு பயனாளர் கணக்கை தொடங்க வேண்டும். இதில் ஒருவர் பதிவு செய்த பெயரில் மற்றவர்கள் பதிவு செய்ய இயலாது. உதாரணத்திற்க்கு ஒருவர் டிவிட்டரில் “Saran” என்று பதிந்து விட்டால், இன்னொருவரால் இதே பெயர் கொண்டு பதிய இயலாது. இது பொதுவான தகவல் தான்.
இவ்வாறு உங்கள் பெயர் குறிப்பிட்ட சோசியல் மீடியா இணையத்தில் உள்ளதா?, என தெரிந்து கொள்ள ஒவ்வொரு குறிப்பிட்ட சோசியல் மீடியா இணையத்திலும் நாம் சோதித்து பார்க்க வேண்டும். இதற்க்கு நிறைய நேரம் எடுக்கும். இதற்க்கான தீர்வு தான் இந்த பதிவு.
நூற்றுக்கும் மேற்ப்பட்ட சோசியல் மீடியா இணையதளங்களில் உங்கள் பெயர் கொண்ட பயனாளர் கணக்கு உள்ளதா? என தெரிந்து கொள்ள ஒரு நிமிடம் போதும். ஆம் இதற்காகவே பிரதானமாக உருவாக்கப்பட்டுள்ளது தான் namechk.com. இதில் ஒரு குறிப்பிட்ட பெயரை கொடுத்து தேடினால் போதும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட சோசியல் மீடியா இணையதளங்களில் தேடி குறிப்பிட்ட பெயர் கொண்ட பயனாளர் கணக்கு உள்ளதா? அல்லது ஏற்கனவே பதிவு செய்யபட்டுவிட்டதா? என தெரிந்துவிடும்.
இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை comment செய்ய மறவாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக