நமது இல்லங்களில் பொதுவாக கணினியில் அச்சுப் பொறி ( Printer ) இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அதை பராமரிப்பது மிகவும் சிரமம்.
பொதுவாக நாம் அச்சு நகல் (Printout) எடுக்க வேண்டுமென்றால் அந்த கோப்பை உங்கள் Pendrive இல் பதிந்து எடுத்துச் செல்வோம்.
இது வரை சரி. இன்னொரு சூழ்நிலை. இணையத்தில் ஒரு முன்பதிவு செய்கிறோம், ஆனால் அதை இணையதிலிரிந்தே அச்சு நகல் (Printout) எடுக்க வேண்டுமென்றால் என்ன செய்வது ?
இதற்காகவே ஒரு மேன்தொகுப்பு உள்ளது. முன்பே பார்த்த மெய்நிகர் குறுந்தகடு (Virtual CD Drive ) போல இது ஒரு மெய்நிகர் அச்சுப் பொறி ( Virtual Printer ).
இந்த வகை மேன்தொகுப்புகளை நிறுவி விட்டால் கணினியின் ஒரு அச்சுப் பொறி போலவே இது செயல் படும். ஆனால் வெளியீடு (output ) ஒரு pdf கோப்பில் இருக்கும்.
இப்போது இந்த கோப்பை வெளியே சென்று அச்சு நகல் எடுக்கலாம்.
மேலும் தேவை இல்லாமல் காகிதத்தை வீண் செய்யாமல் இருப்பதற்கும் இது உதவலாம்.
சுட்டிகளும் மேன்தொகுப்புகளின் பெயர்களும் கீழே.
http://www.primopdf.com/
http://www.dopdf.com/
http://www.cutepdf.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக