உங்கள் விவரம்

திங்கள், 4 அக்டோபர், 2010

விமான பயணத்தில் இ - டிக்கெட்: பாதுகாப்பு அச்சுறுத்தல் என பீதி


மும்பை : விமானத்தில் பயணிப்பதற்காக இணையதளம் மூலம் பெறப்படும் இ - டிக்கெட்டால், விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பயணிப்பதற்காக ஒருவர் இணைய தளம் மூலம் டிக்கெட் வேண்டி பதிவு செய்கிறார். அவருக்கான டிக்கெட் இ - மெயில் இன்பாக்சில் அவருக்கு கிடைத்து விடுகிறது. இந்த டிக்கெட்டை டவுன்லோடு செய்து, ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு விமான நிலையத்துக்கு செல்கிறார். அவரிடம் உள்ள டிக்கெட் படிவத்தைப் பார்த்ததும் விமான நிலைய பாதுகாவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்கின்றனர்.

ஒருவேளை அவர் விமான பயணத்தை ரத்து செய்திருந்தால் கூட இந்த டிக்கெட்டின் பழைய படிவத்தை மற்றொருவர் எடுத்துச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. விமானத்தில் பயணிக்காத அந்த நபர் மூலம் விமான நிலைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். இது போன்று இந்த ஆண்டில் ஒன்பது பேர் டில்லி, மும்பை , கோழிக்கோடு விமான நிலையங்களில் பிடிபட்டுள்ளனர்.

அதிகபட்சமாக இது போன்று, விமான நிலையத்தில் நுழைபவர்களுக்கு ஆயிரத்து 200 ரூபாய் மட்டுமே அபராதம் வசூலிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இதுபோன்று இ - டிக்கெட்டுகளுக்கு சங்கேத எண்கள் வழங்கப்படும். இதன் மூலம், பயணியை சரியாக அடையாளம் காண முடியும். ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை இந்த நடைமுறை இல்லை. எனவே, இ - டிக்கெட்டை எடுத்து வரும் பயணிகளிடம் அவர்களது அடையாள அட்டை போன்ற மற்ற ஆவணங்களை சரிபார்க்கும் படி விமானத்துறை அமைச்சகம், விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலை பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியுள்ளது."இ - டிக்கெட்டை வைத்திருப்பவரின் நடை உடை பாவனைகளை வைத்து அவர் பயணிப்பதற்கான காரணத்தை ஊகிக்க முடியும்' என, தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக