உங்கள் விவரம்

புதன், 27 ஏப்ரல், 2011

உங்கள் பேஸ்புக் நண்பர்கள் எங்கு இருக்கின்றார்கள்?

உங்கள் பேஸ்புக் நண்பர்கள் எங்கு இருக்கின்றார்கள் என world map மூலம் பார்ப்பதற்கு. இம் முறையை பயன்படுத்தலாம். கீழுள்ள தளத்திற்கு சென்று Socialmapஎனும் பேஸ்புக் Applicationனை Allow பண்ணுங்கள். நீங்க் பேஸ்புக் கணக்கை திறந்து வைத்திருந்தால் Go to your map என்னும் தெரிவை அழுத்தவும். இல்லையெனின் Login to find out எனற தெரிவை அழுத்தவும். உனே உங்கள் பேஸ்புக் நண்பர்கள் இருக்கும் இடத்தினை map இல் காண்பீர்கள்.

http://wheremyfriends.be

திங்கள், 11 ஏப்ரல், 2011

போன் குறியீட்டு எண் தரும் தளம்

தொலை தொடர்பு இணைப்பு என்பது இன்று சொடுக்குப் போடும் விநாடிகளில் ஏற்படுத்தப் படும் ஒரு செயலாக மாறிவிட்டது. எந்த நாட்டி லிருந்தும் எந்த நாட்டிற்கும் தொலைபேசி மூலம் தொடர்பினை மேற்கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு குறியீட்டு எண்ணைக் கொண்டுள்ளன. இந்தியாவிற்கு 91 என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அனைத்து நாடுகளின் குறியீட்டு எண்ணை எப்போதும் நினைவில் கொள்ள முடியாதே. இந்த தேவையை நிறைவு செய்திட, இணையத்தில் ஒரு தளம் இயங்குகிறது.         http://www.simplecountrycodes.com      என்ற முகவரியில் உள்ள தளம், அனைத்து நாடுகளுக்கான தொலைபேசி குறியீட்டு எண்ணைத் தருகிறது. இந்தத் தளம் சென்று, எந்த நாட்டிற்கு நீங்கள் அழைப்பை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியுடன் கட்டம் தரப்பட்டு, நாட்டினைத் தேர்ந்தெடுக்க ஒரு நீள் கட்டமும் தரப்படும். இதில் நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து, இரண்டாவதாக, நாம் எந்த நாட்டிலிருந்து அந்த நாட்டினைத் தொடர்பு கொள்கிறோம் என்பதனையும் தேர்ந்தெடுத்துக் காட்ட வேண்டும். பின்னர் Lookup Coundry code என்ற பட்டனில் கிளிக் செய்தால், தேவைப்பட்ட குறியீட்டு எண் கிடைக்கும். மிகவும் பயனுள்ள இந்த தளத்தை நினைவு கொள்ள வேண்டிய தளப் பட்டியலில் வைத்துக் கொள்ளுங்கள்.