உங்கள் விவரம்

செவ்வாய், 22 மார்ச், 2011

Unit Conversion - ( அனைத்து அலகு மாற்றி ) நொடியில் அறிந்து கொள்ளலாம்.

inches , feet , metres , miles , centimetres , kilometres. இன்ச்ஞ், ஃபீட், மீட்டர், மைல், செ.மீ, கி.மீ , Temperature , weight போன்ற அனைத்து அளவுகளையும் ஒன்றில் இருந்து மற்றொன்றாக மாற்றுவதற்காக நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

செ.மீ இருக்கிறது இதை மீட்டராக மாற்றுங்கள் அல்லது இன்ஞ்-ல் இருக்கிறது இதை ஃபீட் ஆக மாற்றுங்கள் என்று சொல்லி பல கேள்விகள் நமக்கு வந்தாலும் , இப்படி வரும் அனைத்து விதமான அலகு மாற்றி கேள்விக்கும் நொடியில் பதில் சொல்லும்படி நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://convert.francepropertyshop.com

இந்ததளத்தில் சென்று  நீள அகலங்களைப் பற்றிய Conversion-க்கு LENGTH என்பதை சொடுக்கவும் அடுத்து Temperature  Conversion-க்கு TEMPERATURE என்பதையும், Weight Conversion-க்கு WEIGHT என்பதையும் சொடுக்கி எளிதாக தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு அளவையும் மற்றொரு அளவாகநொடியில் எளிதாக மாற்றி தெரிந்து கொள்ளலாம்.  முதல் எந்த அலகில் இருக்கிறதோ அதையும் இரண்டாவது கட்டத்திற்குள் எந்த அளவாக மாற்ற வேண்டுமோ அதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டுக்கும் நடுவில் இருக்கும் பொத்தானை சொடுக்கி எந்த அலகும் எளிதாக மாற்றி தெரிந்து கொள்ளலாம். அனைத்து துறையில் இருப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

சனி, 12 மார்ச், 2011

நாம் செல்போன் மற்றும் டிஷ் டிவிகளுக்கு எப்படி இருப்பிடத்திலிருந்தே ரீ-சார்ஜ் மற்றும் டாப்அப் செய்யலாம்

நாம் வெளிநாட்டில்-வெளிஊரில் வேலை செய்பவர்களாக இருப்போம். நமது வயதான பெற்றோர்-மனைவி -நண்பர்கள் சொந்த ஊரில் இருப்பார்கள். அவர்களுடைய செல்போனுக்கு நாம் நமது இருப்பிடத்திலிருந்தே ரீ-சார்ஜ் மற்றும் டாப்அப் செய்யலாம். ஆன்லைனில் வரும் பலபல வசதிகளில் புதியதாக இதுவந்து உள்ளது. இனி ஆன்லைனில் நாம் செல்போன் மற்றும் டிஷ் டிவிகளுக்கு எப்படி ரீசார்ஜ் முதலியவைகளை எளிதாக செய்யலாம் என்பதனை காணலாம்.முதலில் இந்த தளம் செல்லஇங்கு கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்களுடைய பெயர் முகவரி செல்போன் எண் கொடுத்து ரிஜிஸ்டர் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்களுடைய கம்பெனியை தேர்வு செய்யவும். நான் ஏர்டெல் கம்பெனியை தேர்வு செய்துள்ளேன்.
ரீ சார்ஜ் செய்யவிரும்பும் போன் எண்ணை கொடுத்து கோ கொடுக்கவும்.
இப்போது உங்களுக்கு ரீ-சார்ஜ் அல்லது டாப்அப் தேர்வு செய்து அதற்கான தொகையை தேர்வு செய்யவும்.வரும் விண்டோவில் உங்களது வங்கி கண்ககு உள்ள ஏடிஏம் கார்டை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவரும் அதில் உங்கள் வங்கி ஏடிஎம் கார்டில் உள்ள எண் -பெயர் மற்றும் ரகசிய குறியீடு ஆகியவற்றை குறிப்பிடவும்.
இறுதியாக சப்மீட் செய்துவிடவும். உங்களுக்கான தொகை உங்கள் செல்போனில் வந்துவிடும்

புளூடூத்தின் வாரிசாக Wibree



மொபைல் போனை உங்கள் வயர்லெஸ் headset-டோடு இணைக்க, இரு மொபைல்போன்களிடையே தகவல் பறிமாறிக்கொள்ள,இரு மடிக்கணிணிகளிடையே கோப்பு பறிமாறிக்கொள்ளவென புளூடூத்தின் பயன்பாடு இன்னும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. இப்படி மொபைல்போன், கைக்கணிணி, மடிக்கணிணி போன்ற மிகப்பெரிய (?) கைச்சாதனங்களுக்கு மட்டுமே புளூடூத் லாயக்காம், மிகச் சிறிதாக உள்ள கைக்கடிகாரங்கள், பேனா ,கழுத்தில் தொங்கும் நெக்லஸில் டாலராய் கிடக்கும் இரத்த அழுத்த மானிட்டர், இது போன்ற நுண்சாதனங்களால் புளூடூத்தை பயன்படுத்தி கணிணியோடோ அல்லது செல்போனோடோ தொடர்பு கொள்ள இயலாது. ஏனெனில் புளூடூத்துக்கு இந்த நுண்சாதனங்களில் பெரிதாய் ரூம் வேண்டும்.பெரிதாய் ரூம் கொடுத்தால் அப்புறம் கைகடிகாரத்தின் அளவும் பெரிதாகிவிடும்.
கடிகாரம் போன்ற நுண்சாதனங்களிலிருந்தும் கணிணியுடன் ரேடியோ அலைகளால் பேச புதிதாய் வந்திருக்கும் டெக்னாலஜியே வைப்ரீ.இதை
"Ultra Low Power Bluetooth Technology" என்கின்றார்கள். செல்போன் பயில்வான் நோக்கியாவின் நெடு நாளைய கனவு படைப்பு இது. இந்த Wibree ரேடியோ அலைகளால் இனி நுண்பொருட்களும் கணிணியுடனோ அல்லது மொபைல்போனுடனோ பேசலாம்.
பேச சிறிதாய் மட்டுமே மின்சாரம் எடுத்து கொள்வது இதன் பலம்.இப்போதைக்கு 10 மீட்டர் வரை இதன் அலைகள் போகுமாம்.அதிகபட்சம் 1MBbs.
சமீபகாலமாய் விளையாட்டு களத்தில் விளையாண்டவாரே உயிரைவிடும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இது போன்ற வீரர்களின் உடல் நிலையை வயர்லெஸ்ஸாய் கண்காணிக்கவும், வீட்டில் நடமாடிக்கொண்டிருக்கும் வயதானவர்களின் உடல் நிலையை வயர்லெஸ்ஸாய் கண்காணிக்கவும் இது போன்ற டெக்னாலஜிகள் சீக்கிரத்தில் உச்சாணிக்கொம்பில் ஏறலாம்.பொறுத்திருந்து பார்ப்போம்.
More details
http://www.wibree.com/

வியாழன், 10 மார்ச், 2011

உலகத்தில் நேரம்தான் என்ன ?

கூடுதலாக இன்னொறு கூகிள் மேப்.மவுசை உலாவ விட்டு பாருங்கள்.அவரவர் நேரம் தெரியும்.எல்லாம் டெவலப்பர்கள் Google Map API-யோடு போடுகின்ற ஆட்டம் தான்.

http://www.qlock.com/time/gmaps?map=1

செவ்வாய், 1 மார்ச், 2011

ஆங்கிலத்தில் நொடியில் கிடைக்கும் இணையான சிறிய வார்த்தை.

ஆங்கிலத்தை பொருத்தவரை ஒரே பொருளுக்கு பல வார்த்தைகள்
இருந்தாலும் நாம் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தையைத்தான்
இன்னும் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். இதற்கு மாற்றாக
நாம் பயன்படுத்தும் வார்த்தைக்கு இணையான பொருள் உள்ள
வார்த்தையை நொடியில் தேடலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுபவரில் இருந்து கதை எழுதுபவர்கள்
வரை, பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் கல்லூரி செல்லும்
இளைஞர்கள் வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் மேலும் பல
வார்த்தைகளை கற்றுகொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :  http://www.ironicsans.com/thsrs/
இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் என்ன வார்த்தைக்கு இணையான சிறிய வார்த்தை
வேண்டுமோ அதைக் கொடுத்து Look up என்ற பொத்தானை அழுத்த
வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த வார்த்தைக்கு
இணையாக உள்ள சிறிய வார்த்தைகளை பட்டியலிடும் இதில்
இருந்து நமக்குத் தேவையான வார்த்தையை நாம் எடுக்கலாம்.
ஆங்கிலம் கற்றவர்களுக்கும் புதிதாக ஆங்கிலம் கற்றுக்
கொண்டிருப்பவர்களுக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.