உங்கள் விவரம்

வியாழன், 30 செப்டம்பர், 2010

PDF பைல்களுக்கு பத்து இணைய தளங்கள்

டாகுமெண்ட் பார்மட்களில், பயன்பாட்டில் நமக்கு அதிகம் உதவுவது பி.டி.எப். (PDFPortable Document Format) பார்மட் ஆகும். இதனை உருவாக்க அடோப் சாப்ட்வேர் ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க அடோப் ரீடர் இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.

பைல்களை (எக்ஸெல் , வேர்ட் , பி.பி.டி.போன்றவற்றை) பி.டி.எப். பைலாக மாற்ற வேண்டிய அப்ளிகேஷன் புரோகிராம் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பி.டி.எப். பைல்களை உருவாக்கவும், உருவாக்கிய பைல்களைப் பிரித்து வைக்கவும், பகுதி பகுதியாக அவற்றை அமைக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி.எப். பைல்களை இணைக்கவும் இணையத்தில் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

1. பி.டி.எப். மேக்கர் (PDF Maker)

ஒரே கீ கிளிக்கில் பி.டி.எப். பைலாக மாற்றும் திறன் கொண்டது இந்த சாப்ட்வேர். எந்த டெக்ஸ்ட் எடிட்டரிலும் டாகுமெண்ட் ஒன்றை தயாரித்துவிட்டு, இந்த தளம் சென்று டவுண்லோட் பட்டனில் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் லோக்கல் டிரைவில், பைலுக்கான பி.டி.எப். டாகுமெண்ட் கிடைக்கும்.

எந்த பைல் வகையாக இருந்தாலும் பி.டி.எப். டாகுமெண்ட்டை இந்த தளம் தரும். அத்துடன் இதற்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். புதிய டெக்ஸ்ட்டை இணைக்கலாம். பி.டி.எப். ஆன பின்னும் டெக்ஸ்ட்டில் அடிக்கோடிடலாம்; போல்ட் செய்திடலாம்; புதிய படங்களைச் சேர்க்கலாம்; ஏற்கனவே இருக்கிற கிராபிக்ஸ் ஆப்ஜெக்டை நீக்கலாம். பி.டி.எப். ஆன பக்கங்களை சுருக்கலாம், நகர்த்தலாம், ஒன்றுடன் ஒன்றை இணைக்கலாம். என்கிரிப்ட் மற்றும் டி கிரிப்ட் செய்திடலாம்.

முகவரி: கிளிக்



2. பி.டி.எப் – டு – வேர்ட் (PDF2Word)

எந்தவிதமான சிக்கலும் இன்றி பி.டி.எப். பார்மட்டில் உள்ள பைலை மீண்டும் வேர்ட் டாகுமெண்ட்டாக மாற்றலாம். எந்த புரோகிராமினையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இந்த தளம் சென்று, உங்கள் கம்ப்யூட்டரில் பிரவுஸ் செய்து,பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால், அது வேர்ட் பைலாக மாற்றம் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். இது போல மேலும் ஆறு புரோகிராம் களைப் பயன்படுத்திப் பார்த்ததில், இதுதான் மிகச் சிறந்ததாகவும், வேகமாகவும் செயல்படும் புரோகிராமாகத் தெரிகிறது. பி.டி.எப்.பைல்களை வேர்டுக்கு மாற்றம் செய்து, பின் அவற்றை எடிட் செய்து, பின் மீண்டும் பி.டி.எப். ஆக மாற்றம் செய்திட விரும்புவோருக்கு இது மிகவும் பயன்படும்.

முகவரி :கிளிக்



3. பி.டி.எப். கிராக் (PDFCrack)

நீங்கள் ஒரு பி.டி.எப். பைலை பாஸ்வேர்டுடன் உருவாக்கிய பின் பாஸ்வேர்டை மறந்துவிட்டீர்கள். கவலையே வேண்டாம். கீழே உள்ள தளம் செல்லுங்கள் . அங்கு Browse என்ற பீல்டில் கிளிக் செய்து உங்கள் பைல் எங்கு உள்ளது என்று காட்டவும். உடன் அந்த திறக்கப்படும். அது மட்டுமின்றி, பி.டி.எப். பைலை உருவாக்கியவர் இதில் காட்டிய வரையறைகள் எதுவும் இல்லாமல், அந்த பைல் புதிய பிரவுசர் விண்டோவில் காட்டப்படும்.

முகவரி :கிளிக்



4. பி.டி.எப். டு எக்ஸெல் ஆன்லைன் (pdftoexcelonline)

எக்ஸெல் ஒர்க்ஷீட்கள் பி.டி.எப். பார்மட்டில் கிடைத்தால், அதனை மீண்டும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டாக மாற்ற கீழே உள்ள முகவரியை அணுகவும். எக்ஸெல் பைல் உங்களுக்கு இமெயில் வழியே அனுப்பப்படும்.

முகவரி :கிளிக்



5. பி.டி. பைண்ட் (PD Find)

கூகுள் மற்றும் பிங் போன்ற தளங்கள் வழியே நீங்கள் பைல்களைத் தேடிப் பெறலாம். ஆனால் சில வேளைகளில்நீங்கள் தேடும் சொற்களை பி.டி.எப். பைல்களில் மட்டும் தேடிப் பெற வேண்டியதிருக்கும். இந்த தேடும் சொற்களைக் கொடுத்தால், அவை உள்ள பி.டி.எப். பைல்கள் இருக்கும் இடம், அந்த பைல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற விபரங்களுடன் காட்டப்படும்.

முகவரி :கிளிக்



6. பி.டி.எப். வியூ (PDFVue)

அடோப் அக்ரோபட் ரீடர் செய்திடும் உதவியை இந்த தளம் ஆன்லைனில் நமக்குத் தருகிறது. உங்கள் டாகுமெண்ட்டை இதில் அப்லோட் செய்து பி.டி.எப். பைலாகவும் மாற்றி எடிட் செய்திடலாம்.

முகவரி :கிளிக்


7.எச்.டி.எம்.எல். டு பிடிஎப் கன்வெர்டர் (Html to PDF Coverter)

எந்த ஒரு இணைய தளத்தினையும் அல்லது எச்.டி.எம்.எல். பைலையும் பி.டி.எப். பைலாக மாற்றித் தரும்.

முகவரி : கிளிக்




8. மெர்ஜ் பிடிஎப் (Merge PDF)

எந்த சாப்ட்வேர் தொகுப்பையும் டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடாமல், அதிக பட்சம் பத்து பி.டி.எப். பைல்களை இணைக்கலாம். இதனை மேற்கொள்ள ஒவ்வொரு பைலும் 5 எம்பி க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் 10 பைல்களை இணைக்கலாம். பி.டி.எப். பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்தால் போதும்.

முகவரி :கிளிக்




9.கவுண்ட் ஆன் இட் (Count On It)

பி.டி.எப். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள கேரக்டர்களையும் சொற்களையும் எண்ணி அறிய வேண்டுமா? 1 எம்பி வரை உள்ள பி.டி.எப். பைல்களை இதன் மூலம் பயன்படுத்தி எண்ணிக்கையைப் பெறலாம். PDF, HTML, XML, CSV,, பார்மட் பைல்களை மட்டுமே சப்போர்ட் செய்திடும். எம்.எஸ். ஆபீஸ் பைல்களை பயன்படுத்தாது.

முகவரி : கிளிக்



10. ஸ்பீடி பி.டி.எப். (SpeedyPDF)

இது ஒரு சிறிய அப்ளிகேஷன். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால், இது ஒரு பிரிண்டராக உங்கள் கம்ப்யூட்டரில் அமர்ந்துவிடும். நீங்கள் பி.டி.எப்.பார்மட்டில் ஒரு பைலை மாற்ற வேண்டும் என்றால், அதனை பிரிண்ட் கட்டளை கொடுத்து, கிடைக்கும் டயலாக் பாக்ஸில் பிரிண்டராக ஸ்பீடி பிடிஎப் தேர்ந்தெடுக்க வேண்டும். பைல் பி.டி.எப். பைலாக மாற்றித் தரப்படும்.

முகவரி: கிளிக்

புதன், 29 செப்டம்பர், 2010

கைப்பேசியில் திருட்டு

தேவையற்ற நேரத்தில் உங்கள் கைப்பேசியில் ப்லுடூத் ஐ நிறுத்தி வையுங்கள். நீங்கள் உங்கள் கைப்பேசியில் இந்த மென்பொருளை பதிவிறக்கி மெமரி கார்ட் மூலம் உங்கள் கைப்பேசிக்கு கொண்டுவந்து, அதை கைப்பேசியில் மெமரி கார்டில் எந்த பகுதியில் பதிந்தோமோ அந்த இடத்திற்க்கு சென்று இயக்குங்கள் கீழே உள்ள படம் போன்று மென்பொறுள் திறக்கும்
அதில் ப்லுடூத் ஆன் செய்து செர்ச் செய்தீர்கள் ஆனால், பக்கத்தில் உள்ள எந்த கைப்பேசியில் ப்லுடூத் ஆன்ஆகியிருந்தாலும் அதை காட்டும், இப்போது நீங்கள் எளிதாக அந்த கைப்பேசியில் உள்ள எஸ் எம் எஸ், போன்புக்கில் உள்ள அனைத்து எண்களையும், மற்றும் ஸ்டில்ஸ், கால் லாக் ஆகியவைகளை நீங்கள் எளிதாக அவர்களுக்கு தெரியாமல் அதனை எடுத்து விடலாம்


ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

நமக்கு இமெயில் அனுப்பியவரின் விவரங்கள் அறிய

இணையத்தில் பல நிறுவனங்கள் இலவச ஈமெயில் சேவையை தருவதனால் பல பேர் அந்த சேவையை பயன்படுத்தி நம் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இமெயில் அனுப்புகிறோம். இது மட்டுமில்லாமல் நமக்கு தெரியாதவர்கள் மற்றும் சில மோசடி கும்பல்களிடம் இருந்து கூட இமெயில்கள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி அனுப்பப்படும் ஈமெயில்கள் எங்கிருந்து யாரால் அனுப்பபடுகிறது என இங்கு அறிந்து கொள்வோம்.
நமக்கு ஈமெயில் அனுப்பியவரின் விவரம்:
  • இதற்க்கு நமக்கு Spokeo என்ற தளம் நமக்கு உதவி புரிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் http://www.spokeo.com செல்லவும்.

  • இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் உங்களுக்கு தெரியும் காலி இடத்தில் நீங்கள் தகவல் பெற விரும்பும் இமெயில் ஐடியை கொடுத்து அருகே உள்ள SEARCH என்ற அழுத்தவும்.
  • உங்களுக்கு உங்கள் மெயில் ஐடி ஸ்கேன் ஆகி தகவல்கள் தெரியும்.
  • ஒருமுறை நீங்கள் உங்கள் மெயில் ஐடியை கொடுத்து உபயோகித்து பாருங்கள். உங்களுக்கே வியப்பாக இருக்கும்.
FRIENDS:

  • இந்த தளத்தில் இன்னொரு சிறப்பான வசதி நம் மெயில் இந்த friends என்ற வசதி. இந்த வசதியின் மூலம் நம் மெயிலில் உள்ள நண்பர்களின் விவரங்களை அறிந்து கொள்ளமுடியும்.

  • நண்பரே இதில் நீங்கள் உங்கள் பிளாக்கர் மெயில் ஐடியை உபயோகிக்க வேண்டாம். இந்த தளம் பாதுகாப்பு வாய்ந்தது என்று தெரியவில்லை. கவனமாக இருப்பதே நல்லது.

இந்த தளத்தில் மேலும் சில வசதிகள் இருந்தாலும் (NAME FINDER, PHONE FINDER) இவைகள் சரியாக இயங்கவில்லை. ஆகையால் அவைகளை பற்றி இங்கு விளக்கவில்லை.

திங்கள், 20 செப்டம்பர், 2010

பட்டிமன்ற பிரியர்களுக்கு

தீப ஒளி திருநாள், உழவர் திருநாள் என்று தமிழர்களின் விழாக்களுக்கு சிறப்பு சேர்க்கின்ற பட்டியலில் பட்டிமன்றங்களுக்கும் ஓர் இடமுண்டு. திண்டுக்கல் ஐ.லியோனியின் சிறப்பு சிரிப்பு பட்டிமன்றங்களை கண்டும் கேட்டும் நான் ரசித்திருக்கின்றேன். அழகிய வாதங்கள் இரண்டு புறமும் மெருகேற்ற நடுவராக லியோனியின் நகைச்சுவையும் சேர்ந்து மிக நேர்த்தியாக இருக்கும். வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் அறிவை வளர்த்துக் கொள்ளவும் உதவும்.

நான் மட்டும் ரசித்தல் எந்தவிதத்திலும் சரியன்று அதனால் நீங்களும் ரசிப்பதற்கு இங்கு கொடுத்திருக்கின்றேன். பதிவிரக்கத்திற்கான சுட்டிகளை சொடுக்கி கணினியில் தரவிரக்கம் செய்து எப்போது வேண்டுமானாலும் கேட்டு ரசியுங்கள். எல்லா பட்டிமன்றங்களும் எம்.பி.3 என்ற வடிவில் உள்ளன.

பழைய பாடலா புதிய பாடலா முதல் பகுதி
பழைய பாடலா புதிய பாடலா இரண்டாம் பகுதி
திரைதுறை பெண்ணுக்கு பெருமையா சிறுமையா பகுதி ஒன்று
திரைதுறை பெண்ணுக்கு பெருமையா சிறுமையா பகுதி இரண்டு
திரைதுறை பெண்ணுக்கு பெருமையா சிறுமையா பகுதி மூன்று
திரைதுறை பெண்ணுக்கு பெருமையா சிறுமையா பகுதி நான்கு
திரைதுறை பெண்ணுக்கு பெருமையா சிறுமையா பகுதி ஐந்து
திரைதுறை பெண்ணுக்கு பெருமையா சிறுமையா பகுதி ஆறு
கிராமமா நகரமா பகுதி ஒன்று
கிராமமா நகரமா பகுதி இரண்டு
கிராமமா நகரமா பகுதி மூன்று
பணமா குணமா பகுதி ஒன்று
பணமா குணமா பகுதி இரண்டு
பணமே குணமே பகுதி ஒன்று
பணமே குணமே பகுதி இரண்டு
பட்டுக்கோட்டையா கண்ணதாசனா பகுதி ஒன்று
பட்டுக்கோட்டையா கண்ணதாசனா பகுதி இரண்டு
தனி குடும்பமா கூட்டு குடும்பமா பகுதி ஒன்று
தனி குடும்பமா கூட்டு குடும்பமா பகுதி இரண்டு

நமது புகைப்படத்தைப் பார்த்து நாமே சிரிக்க

நமது புகைப்படத்தைப் பார்த்து நாமே சிரிக்க

இது யாருன்னு தெரியுதா?.

தெரியலையா ?. அட நம்ம புரட்சி தலைவருங்க,.

தலைவர் எப்படா புரூலி கணக்கா படத்துல நடிச்சாருன்னு யோசிச்சு குழம்ப வேண்டாம்.

இது போல வடிவமைப்பதற்கு எண்ணற்ற இணைய தளங்கள் உள்ளன. அதைப் பற்றி இந்த இடுகையில்,.

funny.pho.to -

இந்த இணையத்தில் தான் தலைவர் புகைப்படத்தினை மாற்றினேன். கொடுக்கும் புகைப்படத்தினை வைத்துக் கொண்டு காணோளிகளைக் கூட இந்த வலைப்பூ தயாரித்துவிடுகிறது.

en.picjoke.com -

இந்த இணையத்தில் எண்ணற்ற புகைப்படச் சட்டங்கள் கிடைக்கின்றன. நாம் இணைக்கும் புகைப்படத்துடன் சட்டமும் சேர்ந்து அழகாக கிடைக்கின்றது.

loogix.com -

இந்த வலைப்பூவில் நம்முடைய முகத்தை கோணலாக்கி பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது. (அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என்றால் ஆட்டோ வருமே என்பதால், முன்னெச்சரிக்கைக்காக பெயர் தெரியாத ஒரு பயில்வானின் புகைப்படத்தினை பயன்படுத்தியிருக்கிறேன். உங்களுக்கு இவரைத் தெரிந்திருந்தால் என்னை போட்டுக் கொடுத்துவிடாதீர்கள்.)

மென்பொருள்கள் -

இது போன்று வித விதமான புகைப்படங்களை உருவாக்கி மகிழ இலசமாக மென்பொருள்கள் கூட கிடைக்கின்றன.

இந்த மென் பொருள்களை தரவிரக்கம் செய்ய funphotor இணையத்திற்கு செல்லுங்கள்.

வினோதமான வலைப்பூக்கள்

விளையாட

57 விதமான விளையாட்டுகளை கொண்டுள்ளது இந்த வலைத்தளம். ஒவ்வொரு விளையாட்டும் வெவ்வேறு விதமான லாஜிக்குகளைக் கொண்டது.

Orisinal வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

மிகச் சிறிய வலைப்பூ

உலகிலேயே மிகச் சிறிய வலைப்பூ இது. ஒரு ஐகான் அளவே உள்ள இந்த வலைப்பூ, விளையாட்டை அடிப்படையாக கொண்டது.

guimp வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்

மிக நீளமான வலைப்பூ

18.939 கிலோ மீட்டர் அதாவது 11.77 மைல் நீளமான வலைப்பூ இது. உலகின் மிக நீளமான வலைப்பூ இது .

highest வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

சொடுக்காமல்

இந்த வலைப்பூவில் எந்த காரணத்திற்காகவும் சொடுக்க கூடாது. இப்படி உங்கள் மௌசை பயன்படுத்தாமல் மெயில் கூட அனுப்ப முடியும் என்கின்றார்கள்.

dontclick வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

வித்தியாசமான கூகுள் சர்ச்

இந்த தளம் விதவிதமான கூகுள் தேடுபொறிக்கான தீம்களை பெற்றுள்ளது. நமக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இங்கு சொடுக்கவும்

சிறந்த தளங்களை கண்டறிய உதவும் தேடுபொறி

நீங்கள் கொடுக்கும் பிரிவில் சிறந்த பத்து தளங்களை வரிசைப் படுத்தி காட்டுகிறது.

இங்கு

அனிமேசன்

மிக அழகாக அனிமேசனுக்காக வடிவமைக்கப்பட்ட வலைப்பூ இது. இதன் நடுப்பகுதியில் ஓடிடும் உருவங்களை சொடுக்கிப் பாருங்கள். அதன் செய்கைகள் வினோதமாக இருக்கும்.

அனிமேசன் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

ஆன்லைன் மியூசியம்

மிக அரிய தளம் இது. உலகத்தில் இருக்கும் சிறந்த மியூசியங்களை இணையப்படுத்தி இருக்கின்றார்கள்.

coudal வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

குடும்பம்

நமது குடும்பத்தினைப் பற்றியும் முற்கால சந்ததியினரைப் பற்றியும் வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ள உதவும் தளம்.

familysearch வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

2000 நகைச்சுவைகள்

2000 நகைச்சுவை துணுக்குகளைக் கொண்ட வலைப்பூ இது.

jokes2000 வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

பணத்தினை மடிக்கும் கலை

பணத்தினை வைத்துக் கொண்டு பல பொருள்கள் வாங்கிருப்பீர்கள்.என்றாவது மடித்து பார்த்து வித விதமாய் உருவங்களை உருவாக்கியிருக்கீர்களா. இந்த தளத்தைப் பார்த்த பின்பு கண்டிப்பாக நீங்கள் செய்து பார்ப்பீர்கள்.

foldmoney வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

Programmer or Killer?

இந்த இணையத்தில் காட்டப்படும் நபர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்கள் கொலைகாரர்களா மென்பொறியாளர்களா என கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் வினோதமான வலைப்பூ இது.

malevole வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

PhotoshopDisasters

புகைப்படங்களை விளையாட்டிற்காக மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள். கொஞ்சம் கூர்மையாக நோக்கினால் அவர்கள் செய்துள்ள குறும்புகள் தெரியவரும்.

photoshopdisasters வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

வியாழன், 16 செப்டம்பர், 2010

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தளங்கள்!

இந்திய அரசு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட இணையதள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன. பார்த்து பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்தியாவின் முக்கியப் பிரமுகர்கள்
http://india.gov.in/govt/whoswho.php

இந்திய ரயில் விபரம்
http://www.indianrail.gov.in/inet_srcdest_names.html

இந்திய வங்கிகள் விபரம்
http://www.rbi.org.in/scripts/banklinks.aspx

இந்திய பாஸ்போர்ட் விபரம்
http://passport.nic.in/

இந்திய மனித உரிமைகள் ஆணையம்
http://nhrc.nic.in/

இந்தியப் பெண்கள் நல ஆணையம்
http://ncw.nic.in/

இந்தியத் தகவல் அறியும் உரிமை ஆணையம்
http://righttoinformation.gov.in/

இந்தியப் பல்கலைக்கழக மான்யக் குழு
http://www.ugc.ac.in/

இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு
http://www.aicte.ernet.in/

இந்திய மருத்துவக் கல்விக் குழு
http://www.mciindia.org/

இந்திய செவிலியர் கல்விக் குழு
http://www.indiannursingcouncil.org/default.asp

இந்திய விடுதி மேலாண்மை & உணவுத் தொழில்நுட்பக் குழு
http://www.datamationfoundation.org/nchmct/

இந்திய வேளாண்மைக் கல்வி & ஆராய்ச்சிக் குழு
http://www.edcil.co.in/%20www.educationindia4u.nic.in

இந்திய மறுவாழ்வுக் குழுக் கல்வி
http://rehabcouncil.nic.in/programmes/courses.htm

தேசிய ஆசிரியர் கல்விக் குழு
http://www.ncte-in.org/

இந்திய மத்திய பள்ளிக் கல்வி வாரியம்
http://www.cbse.nic.in/

இந்திய மேல்நிலைக் கல்வித் துறை
http://education.nic.in/aboutus.asp

இந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
http://www.civilserviceindia.com/
http://www.civilservice.in/
http://www.upsc.gov.in/
http://www.upscguide.com/
http://www.upscexam.com/

இந்திய ரயில் பணியாளர்கள் தேர்வாணையக் கட்டுப்பாட்டு வாரியம்
http://www.rrcb.gov.in/

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
http://www.tnpsc.gov.in/Index.htm

புதன், 15 செப்டம்பர், 2010

தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவு தொடக்கம்.

தமிழகத்தில் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வருகிறது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதைத் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்திலுள்ள 36 வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் மின் ஆளுகை திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கும் பணி ரூ.5.02 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது.பணிகள் முடிக்கப்பட்டு புதிய இணையதளம்
http://www.tnvelaivaaippu.gov.in/ மூலம் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

பதிவு செய்த தினத்திலிருந்து ஏழு நாட்களுக்குள்
வேலைவாய்ப்பு அடையாள அட்டையை கம்ப்யூட்டர் பிரின்டர் மூலமாக அச்சுப்பிரதி எடுத்துக் கொள்ளலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

புதன், 8 செப்டம்பர், 2010

ஆட்டம் போடும் புகைப்படங்கள்

இது என்னுடைய நண்பர்கள் சொல்லிக் கொடுத்த வழி முறை. முதன் முதலாக நான் இதைச் செய்து பார்த்த போது வியப்பில் மூழ்கிப்போனேன். அதே வியப்பு உங்களுக்கும் வந்திட வேண்டுமல்லாவா எனவே இந்த முறை செயல் விளக்கப் படங்களை மட்டுமே இடுவதாக முடிவு செய்தேன்.

HACKING பற்றி என்ன நினைக்கிறீர்கள் . அது தவறாது என்றா?. இல்லை. அது பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருந்தால் அது தவறுதான்.ஆனால் ஒரு விளையாட்டுக்காக அல்லது நம்முடைய பயண்பாட்டிற்காக புரோகிராம்களை மாற்றுதல் தவறில்லை என்கிறேன் நான். இது ஒரு சின்ன விளையாட்டான INTERNET HACKING TIPS . எனவே எந்த பயமும் இன்றி நீங்கள் இதைப் பயண்படுத்தலாம்.

இந்த வழிமுறைகளை கடைபிடிக்க உங்களுக்கு INTERNET வசதி தேவையில்லை. OFF LINE என்று சொல்லப்படும் சாதாரண நிலையே போதுமானது. INTERNET EXPLORER , OPERA என்று எந்த வலையுலாவியையும் (BROWSERS) பயண்படுத்தலாம்

இந்த விளையாட்டுக்கு நீங்கள் செய்ய வேண்டியது-
1. கீழே இருக்கும் இந்த புரோகிராமை காப்பி செய்து கொள்க.

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+ "px"; DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+" px"}R++}setInterval('A()',5); void(0);

2. பின்பு இதே BROWSER மேலே இருக்கும் ADDRESS BAR –ல் வலைப்பூவின் முகவரியை முழுவதுமாக நீக்கி விட்டு அந்த புரோகிராமை பெஸ்ட் செய்து விடுங்கள். (PASTE THAT CODE IN ADDRESS BAR IN YOUR BROWSER)

3. இப்போது என்டர்(ENTER) கீயை அழுத்தினால் உங்களுக்கு அற்புதமான படங்களின் நடனம் தெரியும்.

அல்லது

4. மேலே இருக்கும் புரோகிராமை காப்பி செய்து விட்டு படங்களைக் கொண்டிருக்கும் ஒரு வலைப்பூவை திறந்து கொள்ளுங்கள்

5. அதனுடைய முகவரியை அழித்துவிட்டு PASTE AND GO அல்லது CTRL கீயுடன் சேர்த்து B கீயையும் அழுத்துங்கள்.

6. இப்போதும் உங்கள் கண் முன்னே வலைப்பூவிலிருந்த புகைப்படங்களின் நடனம் ஆரமிக்கும்.

இந்த வலைப்பூவில் இடப்படும் அனைத்து வழிமுறைகளும் என்னால் செய்து பார்க்கப்பட்டு முடிவுகள் நலமாக வந்தால் மட்டுமே இடப்படுக்கின்றன. அபயமான செயல்களை இதுவரை நாம் செய்யவில்லை. உங்களுடைய கணினிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புரோகிராம்களை நான் இங்கு கொடுக்கப்போவதில்லை.எனவே பயம் கொள்ள வேண்டாம்.
மேலும் சில முறை செய்து பார்த்த அனுபவத்தினால் உங்களுக்கு இதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க இயலும் என எண்ணுகிறேன். உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக கேளுங்கள். என்னுடைய மெயிலின் மூலமாகவும் தொடர்பு கொள்ல்லாம். மறக்காமல் கருத்துரைகளை இடுங்கள்... அப்படியே உங்களுக்கு தெரிந்தவைகளை கூட எனக்கும் கூறுங்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன்.

Ms Word இல் Al – Quran

இறைவனால் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ருடைய இறவில் இறக்கியருளப்பட்ட Al – Quran , இன்று கணினி மயப்படுத்தப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இந்த மென்பொருளின் பெயர் QuranInWord ஆகும். இதன் சிறப்பம்சம் என்ன வென்றால் எமக்கு தேவையான அத்தியாயம் மற்றும் வசனத்தை கொடுத்தால், இலகுவாக அந்த வசனத்தை Ms word இல் காட்டுவது மடடும்மல்லாமல் அதற்குறிய கருத்தை ஆங்கிலத்திலும் தருகின்றது.

ஆங்கிலத்தில் Muhsin Khan மற்றும் Yusuf Ali இரண்டு பெயருடைய மொழிபெயர்ப்பும் உள்ளது என்பது இதன் மற்றுமோர் சிறப்பம்சமாகும். இதனை உங்கள் கணினியில் நிறுவியபின் Ms word ல் Menu bar இல் Al – Quran என்று தெரியும்,அதனை க்ளிக் செய்து தேவையான வசனத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த மென்பொருளின் அளவு 4.02MB தான் Download

என்னதான் இருந்தாலும் தமிழில் மொழிபெயர்ப்பு இல்லை என்று என்னிவிடாதீர்கள்,தமிழிலும் இருக்கின்றது.ஆனால் அது Ms Word இல் தெரியாது.
இந்த மென்பொருளின் அளவு 1.19MB தான் Download

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நம் பிளாக்கை மேலும் அழகாக்க 100+ அழகான கடிகாரங்கள்

நமது வாசகர்களை கவர நாமும் தினம் தினம் புது புது விசயங்களை சேர்க்கிறோம் அந்த வகையில் நமது பிளாக்கையும் அழகு படுத்தலாமே. நமது பிளாக்கை மேலும் அழகாக்க புத்தம் புதிய 100 க்கும் அதிகமான அழகான கடிகாரங்கள் இந்த தளத்தில் உள்ளது இந்த கடிகரங்களில் சில இங்கு கொடுத்துள்ளேன்.


இந்த விட்ஜெட்டை பெற பதிவின் முடிவில் கொடுத்துள்ள லிங்கை க்ளிக் செய்து அந்த தளம் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்

  • இதில் உங்களுக்கு 149 வடிவில் கடிகாரங்கள் உள்ளன. இதில் உங்களுக்கு பிடித்த கடிகாரத்திற்கு கீழே உள்ள HTML CODE என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.
  • இது போல் விண்டோ வந்தவுடன் அதில் உள்ள Html code காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Design- Add a gadget - Html/JavaScript - சென்று நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல இருக்கவேண்டும்.
  • இப்பொழுது கீழே உள்ள Save என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய தளத்தில் நீங்கள் விரும்பிய கடிகாரம் வந்துவிடும்.
  • இதில் Time செட் பண்ண வேண்டியதில்லை உங்கள் கணினியில் இருக்கும் நேரத்தை தானாகவே எடுத்துகொள்ளும் வசதி இதில் உள்ளது.
கடிகாரம் பெறுவதற்கான லிங்க் : http://www.csalim.com/gallery.php

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

இணைய பக்கத்தை லைவ்-ஆக எடிட் செய்ய...

நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் web page-ஐ லைவ் -ஆகா edit செய்ய, கீழே உள்ள code-copy செய்து உங்கள் address bar -இல் பேஸ்ட் செய்யவும்.

javascript: document.body.contentEditable = 'true';document.designMode = 'on'; void 0

அதன் பிறகு, அந்த web page-ஐ நீங்கள் word pad-இல் எடிட் செய்வது போல் எடிட் செய்யலாம்..

உதாரணத்திற்கு தினமலர் வெப்சைட்-இல் உங்களைப்பற்றிய செய்தியை நீங்கள் எடிட் செய்து (அல்லது உருவாக்கி) கொள்ளவும் . பின் அந்த screen-shot எடுத்து நண்பர்களுக்கு மெயில் அனுப்பி பிலிம் கட்டலாம்.

சனி, 4 செப்டம்பர், 2010

Indian Government official Links

Obtain:

· Birth Certificate

· Caste Certificate

· Tribe Certificate

· Domicile Certificate

· Driving Licence

· Marriage Certificate

· Death Certificate

· Search More - How do I

Apply for:

· PAN Card

· TAN Card

· Ration Card

· Passport

· Inclusion of name in the Electoral Rolls

· Search More - How do I

Register:

· Land/Property

· Vehicle

· With State Employment Exchange

· As Employer

· Company

· .IN Domain

· GOV.IN Domain

· Search More - How do I

Check/Track:

· Waiting list status for Central Government Housing

· Status of Stolen Vehicles

· Land Records

· Cause list of Indian Courts

· Court Judgments (JUDIS )

· Daily Court Orders/Case Status

· Acts of Indian Parliament

· Exam Results

· Speed Post Status

· Agricultural Market Prices Online

· Search More - How do I

Book/File/Lodge:

· Train Tickets Online

· Air Tickets Online

· Income Tax Returns

· Complaint with Central Vigilance Commission (CVC)

· Search More - How do I

Contribute to:

· Prime Minister's Relief Fund

· Search More - How do I

Others:

· Send Letters Electronically

· Search More - How do I


Recently Added Online Services

· Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages

· Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu

· Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu

· Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli

· Meghalaya: Search Electoral Roll Online by Name (2008)

· Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008)

· Meghalaya: Search Electoral Roll Online by House number (2008)

· Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay

· Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008)

· Andhra Pradesh: Online Motor Driving School Information

Global Navigation

· Citizens

· Business (External website that opens in a new window)

· Overseas

· Government

· Know India

· Sectors

· Directories

· Documents

· Forms

· Acts

· Rules

· Schemes

· Tenders

· Home

· About the Portal

· Site Map

· Link to Us

· Suggest to a Friend

· Help

· Terms of Use

· Feedback

·